ETV Bharat / state

நெல்லை கோர்ட் வாசல் கொலை; கவனக்குறைவாக இருந்த காவலர்கள்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - NELLAI COURT MURDER

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலையாளிகள், கொலையான மாயாண்டி, சென்னை ஐகோர்ட்
கொலையாளிகள், கொலையான மாயாண்டி, சென்னை ஐகோர்ட் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சென்னை: நெல்லையை உலுக்கிய கோர்ட் வாசல் கொலை சம்பவத்தின்போது பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க நெல்லை காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாலிபர் படுகொலை

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகே மாயாண்டி என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, இளைஞர் கொலை தொடர்பாக சீல் வைத்த உறையில் அறிக்கையை தாக்கல் செய்தனர். சம்பவத்தின் போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான வீடியோ காட்சியையும் காட்டினர்.

தொடர்ந்து வாதிட்ட அவர்கள், தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

வீடியோ காட்சிகளை பார்த்த நீதிபதிகள், ஒரே ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் மட்டுமே வெட்டிய நபரை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என கேள்வி எழுப்பினர்.

செல்ஃபோனில் மூழ்கி கிடக்கின்றனர்

மேலும், எதற்காக கொலை சம்பவம் நடைபெற்றது என்பதை விட, சம்பவம் நடந்த இடம் தான் கவலை அளிப்பதாக உள்ளது எனவும், நீதிமன்ற வாயிலில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் சாட்சிகள் எப்படி சாட்சி கூற நீதிமன்றத்திற்கு வருவர் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பணியில் இருக்கும் காவல்துறையினர் பணியை விட தங்களது செல்ஃபோனில் மூழ்கி கிடப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், 90 சதவீத காவல்துறையினர் அர்பணிப்புடன் பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்து தவறிழைத்த போலீசார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், குற்றவாளியை பிடித்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஊய்க்காட்டானுக்கு பாராட்டு தெரிவித்ததோடு அவருக்கு உரிய பரிசு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடு செய்யும் வரை இடைக்கால ஏற்பாடாக மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேவையான ஆயுதம் தாங்கிய காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.