பெண்களின் கர்ப்பப்பைக்கும், யோனிக்கும் இடையில் காணப்படும் ஒரு சிறிய வாய் பகுதி தான் கர்ப்பப்பை வாய் (Cervix). இந்த பகுதியில் ஏற்படும் புற்றுநோய் தான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் எனப்படுகிறது. உலகளவில் பெண்களை பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில், மார்பக புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்கிறது WHO. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு 99.9 சதவீதம் Human Papillomavirus (HPV) எனும் வைரஸ் தான் காரணியாக உள்ளது.
புற்றுநோய் ஏற்பட காரணம்:
- ஹார்மோன் மாற்றங்கள்: உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி அதிகரிப்பது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோனின் அதிகப்படியான உற்பத்தி கருப்பையை பாதிக்கும்.
- வயது: கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. 50-70 வயதுடைய பெண்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- அயோடின் குறைபாடு: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறிப்பாக அயோடின் குறைபாடுள்ள பெண்களை பாதிக்கும்
- அதிக பேருடன் பாலியல் உறவு கொள்ளுதல்
- HPV தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது
- அதிகமான கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது, புகையிலை பயன்பாடு.
அதிக ஆபத்து யாருக்கு?:
- இளம் வயதில் திருமணம் அல்லது உடலுறவில் ஈடுபடுவர்கள். உடலுறவின் போது சரியான சுகாதார முறைகளை மேற்கொள்ளாத பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
- பலருடன் பாலியல் உறவில் இருக்கும் பெண்கள்
- மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்யும் பெண்கள் மற்றும் அதிகமான குழந்தைகளை பெற்று கொள்பவர்கள்
- எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுடன் உடலுறவு மேற்கொண்டவர்கள்
- 50 வயதிற்கு அதிகமான பெண்களுக்கு இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அறிகுறிகள்:
பிறப்புறுப்பு இரத்தப்போக்கு: உடலுறவு அல்லது மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது, அதிகமாக வெள்ளை படுதல் தொடர்ந்தால்,கர்ப்பப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவும்.
முதுகு வலி: மாதவிடாய் காலங்களை தவிர்த்து முதுகின் அடிப்பகுதியில் வலி அல்லது பிடிப்புகள் போன்றவற்றை அடிக்கடி ஏற்படுவது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். மாதவிடாய் நாட்களை தவிர்த்து இந்த வலிகளை எதிர்கொண்டால் மருத்துவரை அணுகவும்.