கீரைகள்: உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ள கீரையில், கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. பல வகையான கீரைகள் இருந்தாலும், குறிப்பாக வெந்தயக்கீரை மற்றும் பாலக் கீரையில் கால்சியத்தில் அளவு அதிகமாக உள்ளது. உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களை கீரை பூர்த்தி செய்வதால், வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ராகி: தானிய வகைகளில், அதிகளவு கால்சியம் சத்துக்களால் நிறைந்துள்ளது ராகி. அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட ராகி, தென்னிந்தியாவில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை, ரொட்டி, தோசை, கஞ்சி என ராகியை வைத்து தயாரிக்கப்படும் உணவை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.
பால், சீஸ்: தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்கள், கால்சியத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும். பால், தயிர் பிடிக்காதவர்கள், சீஸ், பன்னீர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
அத்திப்பழம்: ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள அத்திப்பழம், கால்சியத்தின் சிறந்த மூலமாகும். தினசரி ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்கும். மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு அரிப்பு தடுக்கப்படும்.