ETV Bharat / health

முதுகு வலி பிரச்சனையை போக்கும் 3 ஆசனங்கள்..இரவில் தூங்க செல்வதற்கு முன் செய்தால் உடனடி நிவாரணம்! - ASANAS FOR LOWER BACK PAIN

இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த 3 யோகா ஆசனங்களை தொடர்ந்து செய்வதால் நாள்பட்ட முதுகுவலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)
author img

By ETV Bharat Health Team

Published : Dec 30, 2024, 5:19 PM IST

இன்றறைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக பெருபாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது முதுகுவலி. குறிப்பாக, இளம் தலைமுறையினரையும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற பிரச்சனைகள் பெரிதும் பாதிக்கிறது. இந்த பிரச்சனையால் பலரும் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலையில், தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் இந்த 3 ஆசனங்களை செய்து வர, முதுகு வலி பிரச்சனை நீங்கும். அந்த வகையில், முதுகு வலியை நீக்கும் ஆசனங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..

  • மர்ஜாரியாசனா (Marjaryasana) : நாள்பட்ட முதுகுவலி, இடுப்பு வலி மற்றும் முதுகில் டிஸ்க் பிரச்சனைகள் உள்ளவர்கள், தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் மர்ஜாரியாசனா செய்து வர பிரச்சனைகள் குணமாகிவிடும். இந்த ஆசனா Cat-cow stretch pose என்றும் அழைக்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஆசனம் கழுத்து வலி பிரச்சனையை நீக்குவதோடு, நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

எப்படி செய்வது: முதலில் தரையில் 2 கைகள் மற்றும் முட்டிகளை பயன்படுத்தி விலங்களை போல நின்று கொள்ள வேண்டும். இப்போது, மூச்சை உள்ளே இழுத்து வயிற்று பகுதியை உள்ளிழுத்து தலையை தூக்கி மேலே பார்க்கவும். இந்த நிலையில் 3 முதல் 4 வினாடிகளுக்கு அப்படியே இருக்கவும். பின்னர், மூச்சை வெளியே விடும் போது தலையை வயிற்று நோக்கி வளைத்து தலையை குனிந்து பார்க்கவும்.

  • சல்ம்ப புஜங்காசனம் (salamba bujangasana): முழங்கைகளைத் தரையில் தாங்கி மேலுடலை உயர்த்துவது தான் சல்ம்ப புஜங்காசனம். இது பாலாசனத்துக்கு மாற்றாக இருக்கும் ஆசனமாகும். இந்த ஆசனத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் செய்வதால், கீழ் முதுகின் தசைகளை வலுப்படுகிறது. கூடுதலாக, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு தோள்களை உறுதியாக்குகிறது. மேலும், இதனை தொடர்ந்து செய்வதால், இடுப்பு பகுதி பலப்படுத்தப்பட்டு வலி நீங்குகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

செய்முறை: தரையில் ஒரு விரிப்பு விரித்து, குப்புறப்படுத்துக்கொள்ளவும். இப்போது, கைகளை மடித்து, கை முட்டி மார்புக்கு அருகில் இருக்குமாறு வைத்து முன்னங்கைகளைத் தரையில் வைக்கவும். பின்னர், தலையையும் மார்பையும் உயர்த்தி, முகத்தை நேராக வைக்கவும். 20 வினாடிகளுக்கு இதை செய்யவும்.

  • ஷஷாங்காசனா (shashankasana) : உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஆசனமாக இருப்பது ஷஷாங்காசனா. இவ்வாசனம் செய்யும் போது, உடல் முழுவதும் நீட்சியடைவதால், மூலாதாரம், மணிப்பூரகம், அனாகதம், ஆக்ஞா மற்றும் குரு சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இந்த ஆசனம் செய்யும் போது, முதுகுத்தண்டு வலுப்பெறுவதோடு, கால் மற்றும் இடுப்பு பகுதியும் வலுபெறும்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

செய்முறை: தரையில் முட்டி போட்டு அமரவும். இரு கால்களுக்கு நடுவில் ஒரு ஜான் அளவு இடைவெளி இருப்பதை உறுதி செய்து முன்னோகி சாய்ந்து தலை தரையில் பட வேண்டும்.

இதையும் படிங்க:

சிகரெட் பிடிப்பதை விட அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து..முதுகு வலிக்கு மருத்துவர் சொல்லும் டிப்ஸ்! - Remedy for Back and Neck Pain

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த 5 உடற்பயிற்சிகளை ஃபாலோ பண்ணுங்க! - EXERCISE FOR DIABETES

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.