ETV Bharat / state

மாணவி வன்கொடுமை விவகாரத்தில் 'ஒரு சிலர்' ஈடுப்பட்டிருப்பதாக சந்தேகம் வருகிறது - திருமாவளவன்! - THIRUMAVALAVAN ABOUT ANNA UNIV

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 3:47 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்புணர்வு செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே, இந்த வழக்கில் அரசு, முக்கியமாக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளாரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தை கட்சி தமிழ்நாடு அரசிற்கு அவ்வபோது சுட்டிக்காட்டி வருகிறோம்.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்துள்ள பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் கைது செய்திருந்தாலும், அந்த குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கை பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்க கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. ஆகவே, அரசு குறிப்பாக, காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க: "பேசிய வீடியோவை வெட்டி பரப்புகின்றனர்" - ஆண்ட பரம்பரை சர்ச்சைக்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாக பிணை வழங்க கூடாது. அவரை சிறையில் வைத்தபடியே புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. யார் அந்த ‘சார்’ என்று ஒரு சந்தேகம் இருப்பதால்தான் நேர்மையான புலன் விசாரணை தேவை.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்த விவகாரம் தொடர்பாக அனுமதி வழங்கப்பட்டு பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். சிலர் அரசு இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடுகிறார்கள். எதுவாக இருந்தாலும் எதிர்கட்சிகளுக்கு போராடுவதற்குரிய வாய்ப்பை வழங்க வேண்டும்," என்றார்.

தொடர்ந்து தனது பயணம் குறித்து பேசிய திருமாவளவன், "மலேசியாவின் பினாங்கு பகுதியில் இரண்டு நாட்கள் உலக தமிழர்களின் வம்சாவளி மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கொடுத்த அழைப்பின் பேரில் மலேசியா பயணம் செய்ய உள்ளேன்.

தமிழகத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைச்சர்களும் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டின் இரண்டாவது நாளில் தொழில் முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்," என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.