வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருந்தாலும், எப்போதும் செவ்வாழைப் பழத்திற்கு என ஒரு தனி மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு காரணம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் செவ்வாழை பெற்றிருப்பது தான். இப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாழையை தினசரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எனபதை தெரிந்து கொள்ளலாம்.
- சத்துக்கள்:பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், வைட்டமின் பி1, பி2, கோலின், ஃபோலேட், கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களை செவ்வாழைப்பழம் உள்ளடக்கியுள்ளது.
- செவ்வாழையில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மற்றும் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க நினைப்பவர்கள் தினசரி ஒரு செவ்வாழை பழம் சாப்பிடலாம். மேலும், இதில் நார்சத்து, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடண்ட் போன்றவவை நல்ல அளவில் உள்ளது.
- நரம்பு தளர்ச்சி ஏற்படும் போது, நமது உடலில் உள்ள பலம் குறையும். எனவே, நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி சரியாவதுடன், ஆண்மை தொடர்பான பிரச்சனை நீங்கும்.
- மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த தீர்வை அளிக்ககூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தினசரி 1 செவ்வாழை சாப்பிடும் போது பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உடலுக்கு தேவையான கால்சியம் சத்து செவ்வாழையில் நிறைந்துள்ளதால், எலும்புகளை வலுவடைய செய்கிறது. 21 நாட்களுக்கு தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வரும் போது ஆடிய பல் கூட கட்டியாகும் என கூறப்படுகிறது.
- சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தருகிறது. உடலில் சிரங்கு பிரச்சனை இருந்தால், தொடர்ந்து 7 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர சரும நோய் குணமடையும்.
- செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி ஆண்களின் விந்தனு எண்ணிக்கையை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமல்லாமல், செவ்வாழையில் உள்ள துத்தநாகம் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், செவ்வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் விந்தணுவை டிஎன்ஏ பாதிப்பிலிருந்து பாதுகாப்பதாக 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
- வயிறு கோளாறு, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாழை மலமிளக்கியாக செயல்படுவதால், குடல் இயக்கத்தை மேம்படுத்தி குடலில் தேங்கியுள்ள மலத்தை வெளியேற்ற உதவியாக இருக்கும்.
எப்போது சாப்பிடலாம்?:செவ்வாழைப்பழத்தை காலை 6 மணிக்கு சாப்பிடுவது சரியான நேரமாக இருக்கிறது. இல்லையென்றால், பகல் 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவுக்கு பின் செவ்வாழை சாப்பிடுவதால் மந்தமான நிலை ஏற்படலாம். அதுமட்டுமல்லாமல், பழத்தின் முழு சத்துகளும் கிடைக்காது.
இதையும் படிங்க: