சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரத்னம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், விஷால் தனது 48வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று சென்னை கீழ்பாக்கம் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவினை வழங்கி மகிழ்ந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், நடிகைகளுக்கு 20 சதவீதம் தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்குச் செல்கிறார்கள்?, அவர்கள் சொல்வது உண்மையா?, திரைப்படம் எடுக்கிறவர்களா? என்பது குறித்து சுதாரித்துக் கொள்ள வேண்டும். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் கமிட்டி அமைக்கப்படும் என்று கூறினார். மேலும், நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என்று கூறியது பேசுபொருளாக மாறியது.