ETV Bharat / entertainment

Dawn Pictures தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா!! - IDHAYAM MURALI TITLE ANNOUNCEMENT

Idhayam Murali Title Announcement: அதர்வா முரளி நடிக்கும் ’இதயம் முரளி’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று(பிப்.13) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

idhayam murali the one side title launch event happened in chennai
idhayam murali the one side title launch event happened in chennai (ETV Bharat)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 14, 2025, 5:48 PM IST

சென்னை: Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, உருவாகும் படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனே இயக்குகிறார். அதர்வா முரளி நடிக்கும் இப்படத்திற்கு ’இதயம் முரளி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா நேற்று(பிப்.13) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக நுழைந்து, தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் ’பராசக்தி’, சிம்புவின் STR49 ஆகிய படங்களை தயாரிக்கிறது டான் பிக்சர்ஸ். அதனை தொடர்ந்து, 4 வது படைப்பாக, முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures. “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பங்கு பெற்றுள்ள நடிகர்கள் குழு கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் அவர்களுடன் உரையாடி, பாடல்கள் பாடி, படத்தின் தகவல்களை பகிர்ந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகை மற்றும் தொகுப்பாளணி ஏஞ்சலினா பேசியதாவது, "தொகுப்பாளிணியாக இருப்பதை விட இப்போது நடிப்பது பிடித்திருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷுக்கு நன்றி. இப்படத்தின் ஷீட்டிங்கிற்கு நானும் அமெரிக்கா செல்கிறேன் என நினைக்கிறேன். இப்போது தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த டீசர் அனைவருக்கும் பிடித்துள்ளது என நம்புகிறேன். அதே போல் படமும் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்றார்.

நடிகர் ரக்‌ஷன் பேசியதாவது, "ஆகாஷ் தமிழ் சினிமாவில் புயல் போல நுழைந்து, பெரிய பெரிய படங்கள் செய்து வருகிறார். உண்மையில் அவர் தயாரிப்பாளர் என்பதை விட இயக்குநர் தான். அவர் படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இந்த டீசரே கலக்கலாக இருக்கிறது. படத்தில் நானும் அதர்வாவுடன் அமெரிக்கா செல்வேன். இந்தப்படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்" என்றார்.

நடிகை பிரக்யா நாக்ரா பேசியதாவது, "இப்படத்தில் அதர்வா முரளி அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது அப்பாவின் புகழ்பெற்ற கதாபாத்திரம் இப்படத்தின் தலைப்பாக அமைந்தது மகிழ்ச்சி. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி" என்றார்.

நடிகை கயாது லோஹர் பேசியதாவது, "தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து வரும் வரவேற்பும், அன்பும், மிகப்பெரிய மகிழ்ச்சியை தருகிறது. இந்த அன்புக்கு பதிலாக, நல்ல படங்கள் மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவேன். இது தான் நான் ஒப்பந்தாமகிய முதல் தமிழ்ப்படம், இந்த வாய்ப்பை வழங்கிய ஆகாஷுக்கு நன்றி. இந்தப்படத்திற்காக உங்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்" என்றார்.

பரிதாபங்கள் புகழ் சுதாகர் மற்றும் டிராவிட் பேசியதாவது, "ஒன் சைட் லவ் இல்லாத ஆளே கிடையாது, சிலருக்கு ஒன் சைட் லவ் கடைசி வரை ஒன் சைடாகவே இருந்து விடும், பலர் அந்த கட்டத்தை தாண்டி விடுவார்கள். ஆனால் அந்த உணர்வு அலாதியானது. நாங்கள் இருவரும் இந்தப்படத்தில் நாயகனின் நண்பர்களாக வருகிறோம். இந்த வாய்ப்பைத் தந்த ஆகாஷ் பிரதருக்கு நன்றி. இந்த ஷீட்டிங் எப்போதும் ஜாலியாக இருக்கும். ஷீட்டிங் எப்போது நடக்கும் என எதிர்பார்ப்போடு இருப்போம். ஆகாஷ் மிகத் திறமையானவர். எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, "இந்த டீம் மிக அற்புதமான டீம். இவர்களுடன் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். ஆகாஷ் மிகத் திறமையான இயக்குநர். அவரும் தமனும் சேர்ந்து அட்டகாசமான ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தமன் பிரதர் எனக்கு எப்போதும் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். அவருக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதர்வாவுடன் வேலை பார்ப்பதை பெருமையாக கருதுகிறேன். இப்படத்தில் நிறைய திறமையாளர்கள் இருக்கிறார்கள், அவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி" என்றார்.

இசையமைப்பாளர் தமன் பேசியதாவது, "நான் நடிப்பேன் என நினைக்கவில்லை, எனக்கு ஜோடி நிஹாரிகா என சொல்லி என்னை இம்ப்ரெஸ் பண்ணி விட்டார் ஆகாஷ். கௌதம் மேனன், ஜீவா கலந்த கலவையாக ஆகாஷ் உள்ளார். கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும். ரொம்ப நல்ல லவ் ஸ்டோரி. உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி" என்றார்.

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது, "தயாரிப்பபை விட இயக்கம் தான் ஈஸி, சின்ன வயதிலிருந்து எனக்கு இயக்குநராகும் ஐடியா இருந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென உருவாக்கிய திரைக்கதை இது. இப்படம் நம் காதல், நட்பை ஞாபகப்படுத்தும். இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அனைவருக்கும் நன்றி. ஒரு அழகான காதல் படமாக இருக்கும் நன்றி" என்றார்.

நடிகர் அதர்வா பேசியதாவது, "ஒன் சைட் லவ் எப்போதும் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம், என் அப்பாவின் கொண்டாடப்பட்ட டைட்டில் இதயம் முரளி, என்னுள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறான், அதைக் கொண்டாடும் வகையில் மிக அழகான காதல் படமாக இருக்கும்.

இயக்குநர் ஆகாஷுக்கு நன்றி. இதயம் முரளி என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம், ஆகாஷ் மிகப்பெரிய தயாரிப்பாளர், அவரை ஒரு இயக்குநராகத் தான் தெரியும். இந்தக்கதையை 2017ல் சொன்னார், அப்போது அது நடக்கவில்லை, பின்பு தயாரிப்பாளராக மாறிவிட்டார், அதன் பிறகு இப்போது இந்தப்படம் செய்யலாம் என்றார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. கண்டிப்பாக இப்படம் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.