தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அரசியல் வருகையை மறைமுகமாக அறிவித்த நடிகர் விஷால்.. அறிக்கையில் கூறியது என்ன? - vishal political entry

Actor Vishal: நடிகர் விஷால் வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாகக் குரல் கொடுக்க தயங்க மாட்டேன் எனத் தனது அரசியல் வருகையை மறைமுகமாக அறிவித்துள்ளார்.

Vishal
விஷால்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 1:01 PM IST

சென்னை: நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் எனவும், அதனை இன்று(பிப்.7) காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளார் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கையில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகனாக, சமூக சேவகனாக உங்களில் ஒருவனாக அந்தஸ்தும், அங்கீகாரமும் அளித்த தமிழக மக்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பக் காலத்திலிருந்தே என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு' என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம்.

அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணி செய்வதுடன், என் தாயார் பெயரில் இயங்கும் 'தேவி அறக்கட்டளை' மூலம் அனைவரும் கல்வி கற்க, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்களின் பெயரில் வருடந்தோறும் பல எண்ணற்ற ஏழை, எளிய மாணவர்கள் படிக்க உதவி வருகிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கும் உதவிகளைச் செய்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி படப்பிடிப்பிற்காக நான் செல்லும் பல இடங்களில் மக்களைச் சந்தித்து அவர்களின் அடிப்படைத் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளையும் என் மக்கள் நல இயக்கம் மூலம் செய்து வருகிறேன்.

நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை,'நன்றி மறப்பது நன்றன்று' என்ற வள்ளுவனின் வாக்குபடி, என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நான் கருதுகிறேன்.

தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளைத் தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாகக் குரல் கொடுக்க தயங்க மாட்டேன்" என அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜய் சமீபத்தில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்குகிறார் என சமூக வலைத்தளங்கில் தகவல்கள் வரலாகப் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் தனது அரசியல் வருகையை மறைமுகமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் விஷால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க:ஸ்பெயின் பயணம் மூலம் தமிழகத்திற்கான முதலீடு?, விஜய் அரசியல் வருகை குறித்து முதலமைச்சர் பதில்!

ABOUT THE AUTHOR

...view details