தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஒரு வழியா கோட் டிரெய்லர் அப்டேட் வந்தாச்சு.. மாஸ் லுக்கில் விஜய்! - GOAT TRAILER Date - GOAT TRAILER DATE

GOAT trailer date: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை வெளியாகிறது.

கோட் டிரெய்லர்
கோட் டிரெய்லர் (Credits - Actor Vijay Instagram account)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 5:22 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’ (The Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாநாடு படத்திற்குப் பிறகு தமிழில் வெங்கட் பிரபு விஜயை வைத்து இயக்குவதால் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் இருந்து 'விசில் போடு', 'ஸ்பார்க்' உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகியது. மேலும், கோட் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

நேற்று கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கோட் டிரெய்லரை ரசிகர்களுக்காக சிறப்பாக தயார் செய்து வருகிறோம் எனக்கூறி ஒரு போஸ்டரை வெளியிட்டார். இந்நிலையில், இன்று படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இன்றைக்கு கண்டிப்பாக அப்டேட் இருக்கு என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், ஒரு வழியாக நடிகர் விஜய் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கோட் டிரெய்லர் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இதன்படி, கோட் டிரெய்லர் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விஜய், அஜித் போன் கால், 'கோட்' படம் பற்றி அஜித் கூறியது என்ன?... வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்கள்! - Venkat Prabhu about GOAT Movie

ABOUT THE AUTHOR

...view details