சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான கார்த்தி கதையம்சம் உள்ள படங்களுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருபவர். கடந்த வருடம் அவரது நடிப்பில் வெளியான ’மெய்யழகன்’ பலராலும் பாரட்டப்பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி.
‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் நடிகரகா அறியப்படும் ‘டாணாக்காரன்’ திரைப்பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இது அவரது 29வது படமாக அமையும் என கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
• #Karthi29 - Raw, Rustic & Dark Gangster Flick Loading 🔥@Karthi_Offl #Vadivelu @directortamil77 @prabhu_sr pic.twitter.com/4OkCkKKNCM
— Ramesh Bala (@rameshlaus) February 8, 2025
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், பணியாற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் என எடது குறித்தும் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு தனது இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸை வேறு விதமாக ஆரம்பித்துள்ளார். சீரியஸான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இதனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. வடிவேலு இப்படத்தில் நடித்தால் கார்த்தியும் வடிவேலும் இணையும் முதல் படமாக இது இருக்கும்.
ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்குள்ளாகவே இணையத்தில் கார்த்தியும் வடிவேலுவும் இருக்கும் போஸ்டரை பகிர்ந்து இந்த தகவல் குறித்து பேசி வருகிறார்கள். வடிவேடு அடுத்ததாக ஃபஹத் பாசிலுடன் மாரீசன், சுந்தர் சியுடன் கேங்கர்ஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். நடிகர் கார்த்தியின் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படம் ரிலீஸிற்கு தயாராகவுள்ளது.
இதையும் படிங்க: நிதி நெருக்கடியில் சிக்கி திணறும் மலையாள சினிமா... காலவரையற்ற வேலை நிறுத்தம்!
A new chapter begins with #Karthi29! We’re excited to bring this special film to life, starring the incredible @Karthi_Offl! More surprises await! ✨#Karthi @directortamil77 @prabhu_sr @B4UMotionPics @ivyofficial2023 #IshanSaksena @RajaS_official @SunilOfficial pic.twitter.com/yBeluLxIzo
— DreamWarriorPictures (@DreamWarriorpic) September 15, 2024
மேலும் தற்போது ‘சர்தார் 2’ படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். இந்த படம் முடிந்ததும் கார்த்தி - தமிழ் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் ராமேஸ்வரத்தில் காட்சிப்படுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மிகவும் ராவான கேங்க்ஸ்டர் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடித்து, 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.