சென்னை : இந்திய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸை ஹிந்தி மொழியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியானது அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட்டது. அந்த வகையில், தமிழில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் இந்த வருடம் நடைபெறும் பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகப் போவதாக திடீரென்று கமல்ஹாசன் அறிவித்தார். தக் லைஃப், கல்கி 2ம் பாகம், இந்தியன் 3 என பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கமல்ஹாசன் அறிக்கை மூலம் உறுதிபடுத்தி இருந்தார்.
இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்தாண்டு நடைபெற உள்ள பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.