தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

லால் சலாம்; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் பொருந்திய கொடி உடன் திருச்சி ரசிகர்கள்! - Aishwarya Rajinikanth flag

Lal Salam: திருச்சியில் லால் சலாம் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவம் மற்றும் வசனங்கள் பொருந்திய கொடியினை ரசிகர்கள் அறிமுகப்படுத்தினர்.

lal salam
லால் சலாம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 12:51 PM IST

Updated : Feb 11, 2024, 1:06 PM IST

லால் சலாம் கொண்டாட்டம்

திருச்சி: இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகிய இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று (பிப்.9) லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, லால் சலாம் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. திரைப்படத்தைக் காண ரசிகர்கள் காலை முதலே திரையரங்குகளில் குவிந்தனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் லால் சலாம் திரைப்படம் வெளியானது. திருச்சி மாரிஸ் திரையரங்கின் வளாகத்தில் ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசுகள் வெடித்து, மேளதாளத்துடன் நடனம் ஆடி கொண்டாடி தீர்த்தனர்.

அப்போது படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவத்துடன், ‘சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்’ என்ற வசனம் பொருந்திய கொடியை ரசிகர்கள் அறிமுகம் செய்தனர். மேலும், இந்த படத்தில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ரஜினிகாந்த் நடித்துள்ளார் என ரசிகர்களால் கூறப்படுகிறது.

அதன்படி, 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி என்கிற கணக்கில் ரூ.40 கோடி வரை சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, சென்னை ரோகிணி திரையரங்கத்தில் 'லால் சலாம்' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

அதற்காக, திரையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயரமான கட் அவுட்டிற்கு, சுமார் ரூ.3 லட்சம் செலவில் பிரமாண்ட மாலை அலங்காரம் செய்து மகிழ்ந்தனர். இது குறித்த வீடியோவை ரோகிணி திரையரங்கம் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த படம் மனிதநேயம், ஒற்றுமை,‌ சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க:தை அமாவாசை; மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீர் இல்லாததால் தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவிப்பு!

Last Updated : Feb 11, 2024, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details