தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வேட்டையன் டிக்கெட் முன்பதிவு: சைலண்டாக சம்பவம் செய்யும் சூப்பர்ஸ்டார்! - Vettaiyan Advance booking - VETTAIYAN ADVANCE BOOKING

Vettaiyan Advance booking: ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், டிக்கெட் முன்பதிவில் இந்திய அளவில் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது

வேட்டையன் போஸ்டர்
வேட்டையன் போஸ்டர் (Credits - @LycaProductions X page)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 9, 2024, 12:10 PM IST

சென்னை: லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’.

அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நாளை (அக்.10) வெளியாகிறது. வேட்டையன் திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்களின் கவனம் குறைவாக இருந்தது. ஆனால் இப்படத்தின் 'மனசிலாயோ' பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

வேட்டையன் படத்தில் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக அமிதாப் பச்சன் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பல வியூகங்களுக்கு மத்தியில் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில், டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் வேட்டையன் டிக்கெட் புக்கிங்கில் சற்று தொய்வு இருந்தாலும், சட்டென்று அதிகரிக்க தொடங்கியது.

பிரபல சினிமா இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியா முழுவதும் வேட்டையன் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை சேர்த்து 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 3007 காட்சிகளுக்கு 6.33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷலாக ஒடிடியில் வெளியாகும் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமண வீடியோ!

மேலும் சென்னையில் 973 காட்சிகளுக்கு 3.21 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் பெங்களூருவில் வேட்டையன் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் 2 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வேட்டையன் படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும் நிலையில், படம் வெளியான பிறகு வசூல் அதிகரித்து வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details