ஹைதராபாத்:பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அவரது 171வது படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல் 22) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தனது முதல் படம் மாநகரம் முதல் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் தனது வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். விக்ரம் படத்திற்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்தது.
ஆனால், அப்போது ரஜினி வேறோரு படத்தில் நடிக்க கால்ஷீட் வழங்கியதால் நடிக்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாகத் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் இந்த கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.