புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. பெற்றோர்கள்தான் தங்களது ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை எவ்வாறு சரிசமானவர்களாக நடத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்கள் குறித்து நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்.
பொதுவாக நான் போராட்டங்கள் நடத்தும் அரசியலில் ஈடுப்படுவதில்லை. விவாதங்கள் மற்றும் அறிவார்ந்த பேச்சு உரையாடல்கள் நிறைந்த அரசியலை விரும்புவன். ஆனால், போரட்டங்கள் நடத்துவது அவரவரது உரிமை. எனவே, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு இடமளிக்க வேண்டும்.
சிசிடிவி கேமரா:
அண்ணா பல்கலைக் கழகம் மிகப்பெரிய அரசு பொறியியல் கல்லூரி. அங்கு சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை என கூறுவது ஏற்றத்தக்கதாக இல்லை. தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கான பாதுக்காப்பு அம்சங்களை பலப்படுத்த வேண்டும்.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!
கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. அனைத்து கட்சிகளின் விருப்பமும் அதுவாக தான் இருக்க வேண்டும். 2026 தேர்தலுக்கு 16 மாதங்கள் உள்ளன. இப்போது அது குறித்து நான் பேசத் தேவையில்லை என நினைக்கிறேன். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரலாம், ஆனால் நிச்சயம் இதே கூட்டணி நீடிக்கும்.
குன்றக்குடிக்கு வர சொல்லுங்கள்:
சாட்டையடி போரட்டத்தில் அண்ணாமலைக்கு வலிக்காமல் இருந்தால், அவரை குன்றக்குடிக்கு வர சொல்லுங்க. கவனத்தை ஈர்க்கவே இது போன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார்.
அவர் செய்த இந்த செயல் ஆராய்ந்த அரசியல்வாதியை போல் இல்லை. அதனால் நான் அவரது சாட்டை போரட்டங்களையும், செருப்பு அணியாமல் முருகனின் அறுப்படை கோயில்களுக்கு செல்வதையும் அவரது ராசியான கடகத்திற்கு கொடுத்த பரிகார செயலாக இருக்கும் என்று எண்ணுகிறேன். எனவே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவாகரத்தில் அண்ணாமலை ரியாலிட்டி ஷோ நடத்துவது போல் நடந்து கொள்வது சரியானதல்ல," என்று தெரிவித்தார்.