ETV Bharat / bharat

முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்குக்கு நினைவிடம்...இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்! - MANMOHAN SINGH MEMORIAL

முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சக அதிகாரிகள் சில இடங்களை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங் (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2025, 1:19 PM IST

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சக அதிகாரிகள் சில இடங்களை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் புதுடெல்லியில் உள்ள விஜய் காட், ராஷ்டிரிய ஸ்மிரிதி சதல் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு நேற்று சென்றனர். மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்கான இடங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புறத்துறை அமைச்சக அதிகாரிகள்-மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடையே இது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இது தவிர மத்திய பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகளும் மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்காக சஞ்சய் காந்தி நினைவிடம், ராஷ்டிரிய ஸ்மிரிதி சதல் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்திருக்கின்றனர். எனினும் இதில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடம் முடிவு செய்த பின்னரே நினைவிடம் கட்டும் பணிகள் தொடங்கும்.

இதையும் படிங்க: தமிழகத்தை சேர்ந்த சர்வதேச சதுரங்க சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட 4 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு...32பேருக்கு அர்ஜூனா விருதும் அறிவிப்பு

மத்திய அரசின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இருந்து மன்மோகன் சிங் குடும்பத்தினர் ஒரு இடத்தை முடிவு செய்த பின்னர், ஒரு அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் கீழ் மன்மோகன் சிங் நினைவிடம் அமைப்பதற்கான நிலம் ஒதுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். முதுமை காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டிசம்பர்26் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்

டெல்லியில் யமுனை நதியை ஒட்டியுள்ள நிகம்போத் காட் என்ற இடத்தில் பொது மயானத்தில் டிசம்பர்28ஆம் தேதி மன்மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்தே இப்போது மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைப்பதற்கு மத்திய அரசு இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.