சென்னை: விஜய் டிவியில் கடந்த 7 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பிரபலங்கள் ஒரே வீட்டில் செல்போன், டிவி என எந்த வித தொழில்நுட்பம் மற்றும் வெளியுலக தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டில் அனைத்து பகுதிகளிலும், கேமரா பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு வார முடிவிலும் மக்கள் ஓட்டெடுப்பின் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.
நடிகர்கள் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைய வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவிப்பதுண்டு. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 வருடங்களாக தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தான் நடித்து வரும் திரைப்படங்களின் படப்பிடிப்பு உள்ளதால் இந்த பிக்பாஸ் சீசனில் இருந்து விலகுவதாக கலம்ஹாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கப் போகும் நட்சத்திரம் யார் என மகக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.