ETV Bharat / entertainment

குடிப்பழக்கம் மிக கொடுமையானது... ’பாட்டல் ராதா’ பட நிகழ்வில் பா. ராஞ்சித் உருக்கமான பேச்சு - BOTTLE RADHA MOVIE TRAILER LAUNCH

Bottle Radha Movie Trailer Launch: 'பாட்டல் ராதா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் குடிப்பழக்கத்தால் தனது அம்மா பட்ட கஷ்டங்களைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார்.

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 3:55 PM IST

சென்னை: இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டில் ராதா. இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஜன்.18) அன்று நடைபெற்றது. இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரஞ்சித், "நான் 12ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாள் இரவு தற்கொலை செய்யும் எண்ணம் ஒரு நொடி தோன்றியது. இது என் வீட்டில் யாருக்கும் தெரியாது என் அண்ணன் இங்கேதான் இருக்கிறார். யாரிடமும் இதுவரை பகிர்ந்ததில்லை. அந்த எண்ணத்திற்கு காரணம் இந்த குடிப்பழக்கம்தான். குடிப்பழக்கம் எவ்வளவு கொடுமையானது என நேரடியாக பார்த்துள்ளேன்.

என்னுடைய அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். எனது அப்பா எங்களுக்கு எல்லாமே செய்திருக்கிறார். எங்களது கல்வி , சாப்பாடு , உடைகள் என எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் யோசிப்பார். ஆனால் குடி என்று வரும் போது அவர் தன்னை இழந்துவிடுவார். என் அம்மா அதனால் நிறைய சிரமப்பட்டார்கள். எனது மனைவியும் குழந்தைகளும் என்னுடைய அம்மாவைப் போல கஷ்டப்படக்கூடாது என முடிவு செய்தேன்.

ஊரில் திருவிழா என்றால் எல்லாருடைய வீடும் சந்தோஷமாக இருக்கும். எங்களுடைய வீட்டில் அந்த சந்தோசம் இருக்காது. எனது அப்பா மட்டுமல்ல எனது நண்பர்களின் அப்பாக்களையும் இப்படி பார்த்திருக்கிறேன்.குடிப்பழக்க்கத்திற்கு அடிமையானவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என கோபம் வந்திருக்கிறது. ஆனால் அது குடிநோய் என கால தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்.

என் அப்பா இறப்பதற்கு முன் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது கல்லீரல் செயலிழந்துவிட்டதால் அவரால் அதிக நாட்கள் வாழ முடியவில்லை சீக்கிரமே இறந்துவிட்டார். தினகரன் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தபோது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. நேரில் பார்த்த விசயங்களை அழகாக சினிமாவாக மாற்றியிருந்தான். வசனங்களும், வாழ்வும், நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது.

இதையும் படிங்க: போர்ச்சுக்கல் கார் ரேஸில் தமிழில் பேசி அன்பை வெளிப்படுத்திய அஜித்குமார்

தினகர் இந்த படத்தை மிக அருமையாக இயக்கியிருக்கிறார். தொடர்ந்து இந்த தமிழ் சினிமாவில் அவசியமான படங்களை தர வேண்டும் என்பது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் விருப்பம். இன்னும் நல்ல படங்கள் , பொழுதுபோக்கோடு சமூகக்கருத்துள்ளபடங்கள் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருப்போம். பாட்டில் ராதா உங்களை ரசிக்கவைப்பதோடு உங்களுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

குடி என்பது ஒரு நொய் என்பது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. குடிப்பவர்களை பார்த்து அவர்கள் மேல் கோபம் தான் வரும் ஆனால் அவர்கள் அந்த நோயால் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது தாமதமாக தான் எனக்கு புரிந்தது. அன்று ஒரு நொடி எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது. எப்படியோ அதில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். என் அப்பா இறப்பதற்கு முன் எப்படியாவது வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது லிவர் செயலிழந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டார்" என பா. ரஞ்சித் உணர்ச்சிவசமாக பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.