சென்னை: சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியுடன் கலந்து கொண்டார். இந்த போட்டியில் 911 ஜிடி3 ஆர் என்ற பந்தயப் பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்தது.
இந்த வெற்றிக்கு திரை பிரபலங்களிலிருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அஜித்குமாரின் ரசிகர்கள் இந்த வெற்றியை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் கார் ரேஸ் தொடரில் (Porsche Sprint challenge Southern European Series) தனது அணியினருடன் கலந்து கொண்டுள்ளார்.
AKs voice from the track. Hear him and it’s motivating.#ajithkumar #AjithKumarRacing #AKRacing #racing #porschesprintchallenge #europe pic.twitter.com/jCkaZiM0Oc
— Suresh Chandra (@SureshChandraa) January 19, 2025
இந்தத் தொடரின் முதல் சுற்றில் 4.653 கி.மீ அளவிலான பந்தய தூரத்தை, 1.49.13 லேப் டைமிங்கில் அஜித்குமார் நிறைவு செய்துள்ள்ளார். மேலும் இதுதான் அவருடைய தனிப்பட்ட சாதனை எனவும், ஐந்து பயிற்சி அமர்வுகளுக்குப் பிறகு இதனை அஜித் சாதித்துள்ளார். இந்த தகவலை அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போர்ச்சுக்கல் கார் பந்தயத்திலிருந்து அஜித்குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனையும் சுரேஷ் சந்திரா அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ‘இந்த பந்தயத்தில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை நன்றாக விளையாடி வருகிறேன். இந்த அனுபவம் அருமையாக உள்ளது. நான் உங்கள் எல்லோரையும் நேசிக்கிறேன்” என ஆங்கிலத்தில் பேசிய அஜித்குமார். திடீரென, ”எல்லோரும் ஆரோக்கியமாக சந்தோசமாக வாழுங்கள்” என தமிழில் பேசினார்.
AK qualifies in the First round of Porsche Sprint challenge Southern European series @ portimao circuit, Portugal with a lap time of 1.49.13 secs a lap around the 4.653 km circuit. His personal best after 5 practice sessions. His personal best #ajithkumar #AjithKumarRacing… pic.twitter.com/PliPGd72ae
— Suresh Chandra (@SureshChandraa) January 19, 2025
இதையும் படிங்க: டைட்டில் வென்ற முத்துக்குமரன், ரன்னர் அப் யாருக்கு..? பிக் பாஸ் சீசன் 8 பைனல்ஸ் முடிவுகள்
அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது கார் ரேஸ் தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் தொடர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.