புதுடெல்லி: 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். வருமான வரி தொடர்பான அறிவிப்பை தொடங்குவதற்கு முன்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை வாசித்தார். நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதா இருக்கும் என கூறிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
''வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி''
என்ற திருக்குறளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான அறிவிப்புக்கு மேற்கோள்கட்டியுள்ளார்.
இந்த திருக்குறளுக்கான பொருள் வருமாறு;
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.