தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கோலாகலமாக தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா! விழாவில் இடம் பெறும் இந்திய படங்கள் என்னென்ன? - Cannes Film Festival 2024 - CANNES FILM FESTIVAL 2024

Cannes Film Festival 2024: கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்கள் மற்றும் திரையிடப்பட உள்ள படங்கள் குறித்து இங்கே காணலாம்.

actress Deepti Sadhwani photo
நடிகை தீப்தி சாத்வானி புகைப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 7:50 AM IST

ஹைதராபாத்: உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் கடந்த மே 14ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இது 77வது கேன்ஸ் திரைப்பட விழாவாகும். கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் ஆடம்பரமான ஆடைகளுடன் பங்கேற்பதை இந்தியா உள்ளிட்ட உலக சினிமா நட்சத்திரங்கள் கௌரவமாக கருதுகின்றனர்.

இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் பார்பி படத்தின் இயக்குநர் க்ரெடா கெர்விக் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து பிரபல நடிகை ஊர்வசி ரவ்டேலா, தீப்தி சாத்வானி ஆகியோர் மின்னும் உடையில் கலந்து கொண்டனர். கண்களை கவரும் பிங்க் உடையில் கலந்து கொண்ட ஊர்வசி ரவ்டேலா ஹேட் ஸ்டோரி 4, சிரஞ்சீவி நாயகனாக நடித்த 'வால்டர் வீரய்யா', லெஜண்ட் சரவணா நடித்த 'லெஜண்ட்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதேபோல் நீளமான ஆரஞ்சு உடையில் கலந்து கொண்ட தீப்தி சாத்வானி மிஸ் நார்த் இந்தியா (Miss North India) பட்டம் வென்றவர் ஆவார். மேலும் பிரபல பின்னணி பாடகியான இவர் 'தாரக் மேக்தா கா ஊல்டா சாஸ்மா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். மேலும் இந்த வருடம் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் ஹைதரி, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பல இந்திய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த வருடம் 7 இந்திய படங்கள் திரையிட உள்ளனர். அதில் All we imagine as light, santosh, sunflowers, manthan, sister midnight too, retreat, the shameless ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. பயால் கபாடியா இயக்கிய மலையாள திரைப்படமான All we imagine as light மே 23ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. sunflowers என்ற கன்னட குறும்படமும் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கேரளா ஸ்டாருடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா! கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவின் அடுத்த மூவி - MAMMOOTTY AND NAYANTHARA FILM

ABOUT THE AUTHOR

...view details