தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

வரலட்சுமி - நிகோலய் சச்தே திருமணம்; ரஜினிக்கு சரத்குமார் நேரில் அழைப்பு! - Varalaxmi Sarathkumar wedding - VARALAXMI SARATHKUMAR WEDDING

Varalakshmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை இன்று சரத்குமார் குடும்பத்தினர் நேரடியாக நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினர்.

Sarathkumar
ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 10:30 PM IST

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் நாயகியாக போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எதிர்மரை கதாபாத்திரத்தில் நடித்தார். அது அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

சமீபத்தில் ஹனுமான் படத்தில் அக்காவாக நடித்து வரவேற்பு பெற்றார். நீண்ட வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த அவருக்கு தற்போது திருமணம் நடக்க உள்ளது. இதன்படி, வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று சரத்குமார் குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் லதா ஆகிய இருவரையும் எனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், திருமணம் வெளிநாட்டில் நடக்க உள்ளதாகவும், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் அடுத்த மாதம் மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமான முறையில் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கியமான திரைப்பிரபலங்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க:கில்லியைத் தொடர்ந்து ரீ ரிலீஸூக்கு தயாராகும் 'துப்பாக்கி'.. உற்சாக வெள்ளத்தில் விஜய் ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details