தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திரைப்படமான சென்னையை உலுக்கிய கலவர சம்பவம்; ஆர்.ஜே.பாலாஜியின் ’சொர்க்க வாசல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

RJ balaji Sorgavaasal first look: சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்த்தில் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள ’சொர்க்க வாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

சொர்க்க வாசல் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக்
சொர்க்க வாசல் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பிரபல ஆர்ஜேவாக இருந்து திரையுலகில் நுழைந்து தற்போது முன்னணி நடிகர் மற்றும் இயக்குநராக மாறியுள்ளவர் ஆர்ஜே பாலாஜி. முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த 'தீயா வேலை செய்யனும் குமாரு' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர் எல்.கே.ஜி என்ற படத்தின் மூலம் கதை நாயகனாக உருவெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன் ஆகிய படங்களில் கதை நாயகனாக நடித்து குறிப்பிடும் நடிகராக முன்னேறியவர். தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். சிறிய நடிகராக சினிமாவிற்குள் நுழைந்து தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகரான சூர்யா படத்தை இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’சொர்க்க வாசல்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார். முதல் தோற்றத்தில் சிறைக்கைதியான ஆர்ஜே பாலாஜி கையில் கைதி எண் எழுதிய பலகையை வைத்துள்ளார்.

இதையும் படிங்க:படக்குழுவினருடன் குறும்புத்தனம் செய்யும் விஜய்... ’லியோ’ திரைப்பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு!

அதில் 1999 என எழுதப்பட்டுள்ளது. இது சென்னை மத்திய சிறையில் 1990களில் நடந்த உண்மையை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலவர சம்பவம் நடைபெற்ற போது பல கைதிகள் சிறையை விட்டு தப்பித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details