ETV Bharat / state

'TAMILNADU' வார்த்தையில் ழகரம் இல்லை.. அரசுக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு..! - ZHAGARAM IN TAMIL NADU

தமிழ்நாடு அரசாணைகளில் 'TAMILNADU' என்ற வார்த்தையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 1:16 PM IST

சென்னை: தமிழ்நாடு தொடர்பான அரசாணைகளில் 'TAMILNADU' என்ற வார்த்தையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசாணைகளில் ஆங்கிலத்தில் STATE GOVERNMENT OF TAMILNADU என குறிப்பிடப்படுகிறது. இந்த வார்த்தையில் பிழை இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழ் மொழியின் சிறப்புமிக்க எழுத்தாக 'ழ' கரம் உள்ளது.

இதையும் படிங்க: பள்ளியில் வைத்து ஆசிரியை கொலை; திருமணத்திற்கு மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்!

அரசு தொடர்பான அரசாணைகளில் STATE GOVERNMENT OF TAMILNADU எனக் குறிப்பிடப்படுகிறது. இது 'டமில் நடு' என தவறாக உச்சரிக்கும் வகையில் உள்ளது. ஆகவே சிறப்பு ழ கரம் இடம்பெறும் வகையில் THAMIZHL NAADU அல்லது TAHMIZHL NAADU எனது திருத்தம் செய்யக்கோரி கடந்த 2021ல் வழக்கு தொடர்ந்தேன்.

நீதிமன்றம் 8 வாரங்களுக்குள்ளாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக முதன்மைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் இதுவரை அது தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியின் நல்லனுக்காகவே திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது.

ஆகவே, அரசின் சுற்றறிக்கைகளில் THAMIZHL NAADU அல்லது TAHMIZHL NAADU என திருத்தம் செய்து பயன்படுத்தவும், சேர, சோழ, பாண்டியர்களின் சின்னங்களை கொண்டு தமிழ்நாட்டிற்கென கொடியை வடிவமைத்து பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, "மனுதாரரின் மனுவை விரைவாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.