ஐதராபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக அர்ஜென்டினா கால்பந்து அணி மற்றும் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இந்தியா வர உள்ளதாக கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் வி அப்துரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியை நடத்தக் கூடிய உள்கட்டமைப்பு மாநிலத்திற்கு உள்ளதாக கூறினார். அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனைத்து நிதி உதவிகளையும் மாநில அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடைசியாக 13 ஆண்டுகளுக்கு முன் லயோனஸ் மெஸ்ஸி இந்தியா வந்து கால்பந்து போட்டியில் விளையாடி இருந்தார். கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற வெனிசுலாவுடனான நட்புறவு ரீதியிலான போட்டியில் லயோனல் மெஸ்சி விளையாடி இருந்தார். அதன்பின் மீண்டும் அவர் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் லயோனல் மெஸ்ஸி அதிகளவிலான ரசிகர்கள் உண்டு, அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டை பிரதானமாக கொண்டு இருக்கும் கேரளாவில் மெஸ்ஸிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஈடாக கேரளாவில் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் அதிகம்.
🚨MESSI COMING TO INDIA 🇮🇳
— Ayyappan (@Ayyappan_1504) November 20, 2024
Argentina team set to Play International Match in Kerala Next Year !! #LionelNation pic.twitter.com/oAOJiEJ8yl
தற்போது அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கிளப் அணிக்காக மேஜர் லீக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மெஸ்ஸி, தொடர்ந்து அர்ஜென்டினா தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2022 உலக கோப்பை கால்பந்து தொடரில் அவர் தலைமையில் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று இருந்தது.
2026ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போடிடியிலும் அவர் கலந்து கொள்வார் என அந்நாடு எதிர்பார்த்து காத்திருக்கிறது. இருப்பினும் அவர் விளையாடுவாரா என்பது பொறுத்து இருந்து தான் தெரியவரும்.
இதையும் படிங்க: 2 உலக சாதனை படைத்த இந்திய அணி! ஆனாலும் பாகிஸ்தானை முந்த முடியல!