சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கதீஜா, ரஹீமா என 2 மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கடந்த 29 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருவரும் இருந்து வந்த நிலையில், இருவருக்குமிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளி உருவாக்கியுள்ளதால் அவரை விட்டு பிரியும் கடினமான முடிவை அவரது மனைவி சாய்ரா பானு எடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ரகுமானின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய்ரா பானுவின் இந்த முடிவையடுத்து, இதுதொடர்பாக அவரது மகன் ஏ.ஆர்.அமீன் தமது இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.