தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

காந்தாரா கையில் 'கல்கி 2898 AD' புஜ்ஜி வாகனம்.. வெளியான மாஸ் கிளிக்ஸ்! - Rishab Shetty drives Kalki 2898 AD - RISHAB SHETTY DRIVES KALKI 2898 AD

Kalki 2898 AD: நடிகர் ரிஷப் ஷெட்டி 'கல்கி 2898 AD' பட புஜ்ஜி வாகனத்தை ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கல்கி போஸ்டர், ரிஷப் ஷெட்டி புகைப்படம்
கல்கி போஸ்டர், ரிஷப் ஷெட்டி புகைப்படம் (credits - Vyjayanthi Movies X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 5:00 PM IST

சென்னை: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள புதிய படம் 'கல்கி 2898 AD'. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் 'கல்கி 2898 AD' படத்தில் பயன்படுத்தப்பட்ட எதிர்கால வாகனமான புஜ்ஜியை காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி ஓட்டிய காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், கல்கி x காந்தாரா எனும் பதிவுடன் ரிஷப் ஷெட்டி புஜ்ஜியை ஓட்டிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில். "ரிஷப் ஷெட்டி கல்கி 2898 AD படமானது வரும் ஜூன் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் பிரபாஸ்-க்கு வாழ்த்துக்களையும்" தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆனந்த் மஹிந்திராவும் புஜ்ஜி வாகனத்தை ஓட்டியது வாகனத்தின் வசீகரத்தை அதிகப்படுத்துகிறது.

இதையும் படிங்க:“நாம இல்லாம ஊழல் நடந்திடுமா?” - இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் பேச்சு! - Indian 2 Trailer Release

ABOUT THE AUTHOR

...view details