ETV Bharat / state

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்! - TUNGSTEN ISSUE

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இன்று காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (@EPSTamilNadu, @mkstalin)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 9:31 PM IST

சென்னை: மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தமிழக சட்டப்பேரவையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் குறித்த விவாதம் :

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முறையில் விடப்படும்போது, அதன் வருவாய் அரசுக்கு கிடைக்கும் என்பதால் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோம்.

சபாநாயகர் அப்பாவு: தம்பிதுரை ஆதரித்தது தான் டங்ஸ்டன் பிரச்சனைக்கு காரணம்.

எடப்பாடி பழனிசாமி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த கனிமவளத் திருத்த சட்டத்தை தான் ஆதரித்தோம்.

அப்பாவு: கனிமவளத் திருத்த சட்டத்தை ஆதரிக்கவில்லை என்றால் டங்ஸ்டன் வந்திருக்காது.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்த உரிமையை, மத்திய அரசிடம் போனதற்கு ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்.

எடப்பாடி பழனிசாமி: இந்தியா முழுவதும் கொண்டு வரும் சட்டம். ஏன் திமுக எம்.பி.க்கள் அதனை எதிர்க்கவில்லை?

முதலமைச்சர் ஸ்டாலின்: திமுக எம்பி-க்கள் எதிர்த்துள்ளார்கள்.

எடப்பாடி: திமுக எம்பி-க்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. மாநில அரசும் 10 மாத காலம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின்: திமுக எம்பி-க்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம், திமுக மட்டும் அல்ல தோழமை கட்சிகளின் எம்.பி.க்களும் எதிரப்பு தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி: பதட்டமான சூழல் உள்ளதால் டங்ஸ்டனை அதிமுக எதிர்க்கிறது.

அப்பாவு : ஏன் ஆதரித்தீர்கள்? ஆதரவு தந்ததால் தான் டங்ஸ்டன் வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி: இந்த திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் போட்டபோது திமுக ஏன் எதிர்க்கவில்லை?

அப்பாவு : அடுத்த சப்ஜெக்ட்டுக்கு வாங்க.

அமைச்சர் துரைமுருகன் : நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். அவர்களிடமிருந்து பதில் இல்லை. அதனால் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார்.

இவ்வாறு மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.