சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஜனவரி 10) வெள்ளிக்கிழமை சந்தித்துள்ளார்.
இதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் கைதாகியுள்ள ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கஞ்சா மற்றும் போதை கலாச்சாராத்தை ஒழிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் கூறியதாசது, “விஜயகாந்த் குரு பூஜை பேரணிக்கு 20 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாளுக்கு முன்பாக அனுமதி மறுத்தார்கள். ஆனாலும், அமைதியான முறையில் பேரணியை நடத்தி முடித்தோம்.
இன்று (10.01.2025)
— Premallatha Vijayakant (@PremallathaDmdk) January 10, 2025
தலைமை கழக நிர்வாகிகள், சென்னை மாவட்ட கழக செயலாளர்களுடன், நேரில் சந்தித்து,தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்து , கஞ்சா மற்றும் போதை கலாச்சாராத்தை ஒழிக்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், மதுரை மேலூர் டங்ஸ்டன்… pic.twitter.com/cvKPyQanmH
எதிர்கட்சிகள் போராட்டத்திற்கு ஏன் அனுமதி மறுப்பு?
மக்களுக்கு பொங்கல் தொகுப்பில் ரூ.1000 வழங்க வேண்டும், மழை நிவாரணம், டாஸ்மாக், போதைப் பொருட்களை தடுக்க வேண்டும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த திமுக ஏன் அனுமதி தரவில்லை. திமுகவுக்கு ஒரு நியாயம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நியாயமா?
பொங்கள் தொகுப்பு பரிசசு ரூ.1000 கூட திமுக அரசால் கொடுக்க முடியவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வரும்போது ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாக்கு வாங்கி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறீர்களா? அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் கைதாகியுள்ள ஞானசேகரனுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்: பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்!
டங்ஸ்டன் திட்டம் வராது என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம். மதுரை மேலூர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
ஈரோடு இடைத்தேர்தல்:
தமிழ்நாட்டில் நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் தேமுதிக போட்டியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாட்டை ஓரிரு நாட்களில் அறிவிப்போம். இடைத்தேர்தல்களில், ஜனநாயகத்திற்கு எதிராக மக்களை ஆட்டு மந்தையில் அடைப்பது போல் அடைத்து ஓட்டுக்களை பெற முயற்சி செய்தார்கள். திமுக ஆட்சியில் எந்த இடைத்தேர்தல் வந்தாலும் அது அராஜக இடைத்தேர்தலாக தான் இருக்கும்.
நாதக சீமான், பெரியார் தொடர்பாக பேசியதற்கு அவர்தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பெரியார் நூல்களை நாட்டுடையமை ஆக்குவது நல்லது. பெரியார் யார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் செய்ததை யாரும் இல்லை என்று சொல்ல முடியும்.வாழ்ந்து மறைந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாக பேசுவதை தேமுதிக நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.