ETV Bharat / state

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 'திடீர்' வாயு கசிவு: 13 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி! - DMS GAS LEAK

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஏ.சி.யில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது.

டிஎம்எஸ் வளாகம் - கோப்புப்படம்
டிஎம்எஸ் வளாகம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 7:17 PM IST

சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஏசியில் இருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்டு 13 ஊழியர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, DMS வளாகத்தில் அவசரகால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 102,104,108 அமரர் ஊர்தி உதவி எண் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீர் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்களுக்கு தொண்டை எரிச்சல், இருமல் ஏற்பட்டது. சிலர் திடீரென மயக்கம் அடைந்தனர்.

இதில் கடும் பாதிப்படைந்த 2 ஆண்கள் உட்பட 13 ஊழியர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூன்று பேர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்றவர்கள் எந்த வித பாதிப்பும் இன்றி தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என ராயப்பேட்டை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திடீர் வாயு கசிவு சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.