சென்னை:தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகராக இருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர்நடனம்,நடிப்பு மட்டுமின்றி, இயக்குனராகவும் அறியப்படுபவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த முனி பட பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் வெளியானது.
இந்நிலையில், தெலுங்கில் ’ராக்ஷசுடு’, ‘கிலாடி’ போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கோனேரு சத்யநாராயணா மற்றும் நீலாத்ரி புரொடக்சன்ஸ் இணைந்து நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளார் என படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.