ஹைதராபாத்: பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற புத்தக நிறுவனம், தமிழின் பிரபல புராண காவியமான கம்பராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பல்வேறு பாகங்களாக வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. இந்த கம்பராமயணம் மொத்தம் ஆறு தமிழறிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களால் வரும் 2028 முதல் 2030க்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பராமாயணம் தமிழ் இலக்கியத்தில் மிகச்சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. இந்த காவியத்தில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்ட விதம், கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மற்றும் வாசிப்பாளர்களை ஈர்க்கும் தன்மை ஆகியவற்றால் பெயர் பெற்றது.
42 ஆயிரம் வசன வரிகளுடன், மொத்தம் ஆறு புத்தகங்களைக் கொண்ட கம்பராமாயணம் ஏழு பாகங்களாக பிரிக்கப்படுகிறது. முதல் பாகம் தலைப்பு: பாலா, இரண்டாவது பாகம்: அயோத்தியா, மூன்றாவது பாகம்: ஆரண்யா, நான்காவது பாகம்: கிஷ்கிந்தா, ஐந்தாவது பாகம்: சுந்தரா, ஆறாவது மற்றும் ஏழாவது பாகம்: யுத்தா ஆகியவையாகும்.
இந்த கம்பராமாயணத்தின் மொழிபெயர்ப்பை எழுதியவருள் ஒருவரான கல்வியாளர் வெங்கடேசன், "12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் கம்பன், ராமாயணத்தை 10 ஆயிரம் வரிகளில் எழுதியுள்ளார். அவை ஒவ்வொன்றும் அதிசயமாகும். அவரது படைப்பு மக்களின் நாகரிகம், அதன் நிலப்பரப்புகள், உணர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.