சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. ரெட் ஜெயன்ட் மூவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவும் லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் ‘என்னை இழுக்குதடி’ பாடல் இளைஞர்களிடையே சமூக ஊடகங்களில் வைரல் ஹிட்டானது. மேலும் இன்னொரு பாடலான பிரேக் அப் பாடலை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இவ்வாறாக மொத்த ஆல்பமுமே ஏ.ஆர்.ரகுமான் இசையில் கவனிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன.
#KadhalikkaNeramillai - Beautiful Modern Love Tale♥️
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) January 14, 2025
It's definitely a #RaviMohan's comeback🎯 His performance is so matured & just simple Awestruck ♥️♥️ & @arrahman 's MUSIC Worked Well 👌
Eventhough NithyaMenen has the better screentime, @iam_RaviMohan scenes was the… pic.twitter.com/CKiJrwEW9t
இந்நிலையில் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் பதிவிட்டுள்ள விமர்சனத்தில் ”தற்போதிருக்கும் தலைமுறையின் அழகான நவீன காதல் கதையாக இத்திரைப்படம் உள்ளது. நடிகர்கள் ரவி மோகன், நித்யா மேனன் இருவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரவி மோகனைவிட நித்யா மேனனுக்கு அதிகமான திரை நேரமும் முக்கியத்துவமும் இருக்கிறது”, என கூறியுள்ளனர்.
#KadhalikkaNeramillai - Not a Film which works for everyone !!
— AmuthaBharathi (@CinemaWithAB) January 14, 2025
Personally I Liked better than recent #Ravi films (Agilan, Iraivan, Siren & Brother)🤝
Discussed about a lot of Mature subjects like pregnancy with a single parent, LGBTQ etc.
Youngsters can give it a try... Might… pic.twitter.com/EssnHkSvmM
அதேபோல் 'காதலிக்க நேரமில்லை' எல்லோரும் பார்க்கும்படியான படமாக இருக்குமா என்பது சந்தேகம்தான் என்றும், புரிந்துகொள்வதற்கு முதிர்ச்சி தேவையான விஷயங்களான தனி பெற்றோர்களின் வளர்ப்பு (Single Parenting), பால் புதுமையினரின் காதல் (LGBTQ), ஓரின ஈர்ப்பாளர்களின் வாழ்க்கை, செயற்கை கருத்தரிப்பு போன்றவற்றை கதைக்களமாக கொண்டிருக்கிறது இப்படம். இளையதலைமுறையினருக்கான படமாக இருக்கும் என மற்றொரு விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் மிகத் தைரியமான முயற்சி. Gen z எனப்படும் அடுத்த தலைமுறையினரின் காதல் கதையை அழகாக காட்டியுள்ளனர். படம் மெதுவாக சென்றாலும் அது பெரிய குறையாக இல்லை. முதல் பாதியை விட இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார்தான் என்றாலும் பெரிய பிரச்சனையில்லை. படத்தின் இறுதிக்காட்சி வழக்கமான காதல் படங்களைப் போல இல்லாதது சிறப்பு. கண்டிப்பாக பார்க்கலாம் என மற்றொரு விமர்சனத்தில் கூறப்பட்டுள்ளது.
#KadhalikkaNeramIllai ❤️it's a bold attempt unexpected from @iam_RaviMohan 💥 படம் மெதுவதான் போகும் பட் பெருசா போர் அடிக்காது 👍 நல்ல ஒரு feel good படமா இருக்கு next generation story புதுசாவும் இருக்கு 😍 making music nu எல்லாமே quality ah இருக்கு 👌 மலையாளத்துல வந்து இருந்த… pic.twitter.com/BL48Ud9rEc
— RamKumarr (@ramk8060) January 15, 2025
அனைத்து விமர்சனங்களிலும் ஏ.ஆர்.ரகுமானின் இசையும் பாடல்களும் மிகவும் பாரட்டப்பட்டு வருகிறது. எல்லாவற்றையும் தாண்டி படத்தின் மிக முக்கியமான பலம் அவர் என கொண்டாடுகின்றனர். மேலும் அவரது இசை தற்காலத்துக்கும் ஏற்றவாறு புதுமையாக இருக்கிறது எனவும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர். இதற்கு முன்பு வெளியான ரவி மோகன் படங்களைவிட இந்த படம் சிறப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 28 ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடப்படும் ’இருவர்’.. இரு சாமனியர்கள் அரசியல் கதை
மேலே கூறப்பட்ட சமூகத்தால் பெரிதும் பேசப்படாத விஷயங்களை படத்தில் பேசியது பலராலும் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. பால் புதுமையினருக்கு எதிரான கருத்துடையவர்கள் படத்தைப் பற்றி இணையத்தில் எதிர்மறையான கருத்துகளை கூறி வருகின்றனர். இவ்வாறாக கலவையான விமர்சனங்களை காதலிக்க நேரமில்லை பெற்று வருகிறது.
The first half was slow and I could not say it was bad, it's decent .Second half is convincing but the climax looks more stretched.
— Monesh (@MoneshMj) January 14, 2025
Climax ended in a different way apart from the regular love story .
Just give it a try and say your opinions🙌 https://t.co/GTrdmpKq8y