சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மகாராஜா, அமரன் திரைபப்டங்கள் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு மொழி சினிமாக்களை சென்னையில் காண மக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. மேலும் இது சினிமா ரசிகர்களின் ரசனையை இன்னும் மேம்படுத்தி கொள்ள வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி நேற்று (டிச.19) வரை நடைபெற்றது.
மொத்தம் 50 நாடுகளிலிருந்து 123 திரைப்படங்கள் திரையிடப்பட்டது. இந்த திரைப்பட விழாவில் முதல் படமாக "the room next door" திரையிடப்பட்டது. கடைசி படமாக "Anora" என்ற படம் திரையிடப்பட்டது. திரைப்பட விழாவின் கடைசி நாளான நேற்று நிறைவு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தமிழில் 2024இல் வெளியான சிறந்த திரைப்படம், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. விருது வென்றவர்கள் பட்டியல்
- சிறந்த தமிழ்த் திரைப்படம் - ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் மகேந்திரன் (RKFI) ஆகியோருக்கு தலா 1 லட்சம் பரிசுத் தொகை
- இரண்டாவது சிறந்த திரைப்படம் - லப்பர் பந்து
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் லக்ஷ்மண் குமார் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் பரிசுத்தொகை
- சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா)