சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய விடாமுயற்சி படப்பிடிப்பு சமீபத்தில் அசர்பைஜானில் முடிவடைந்தது. அஜித் நடிப்பில் கடைசியாக 2022இல் துணிவு திரைப்படம் வெளியானது.
இதனைத்தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு பிறகு அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. கடந்த நவம்பர் மாதம் விடாமுயற்சி படத்தின் டீசர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வெளியானது. விடாமுயற்சி பயணம் தொடர்பான கதை என கூறப்படும் நிலையில், படப்பிடிப்பு கிட்டதட்ட அசர்பைஜானில் நடைபெற்றது. டீசரின் மூலம் இந்த படத்தில் அர்ஜூன் அல்லது ஆரவ் வில்லனாக இருக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும் ‘எல்லோரும் எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு’ என்ற வாசகம் இடம்பெற்றது.
Actress @actorramya is on board for VIDAAMUYARCHI 🔥 Gear up to witness her elegance on screen. 🤩#Vidaamuyarchi From Pongal 2025 #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial… pic.twitter.com/wBtaLyJLym
— Lyca Productions (@LycaProductions) December 20, 2024
விடாமுயற்சி டீசர் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், கடந்த வாரம் அஜித்குமார் எடை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. அஜித்குமார் தீனா பட காலகட்டத்தில் ஸ்லிம்மாக இருந்தது போல் உள்ளார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக அஜித் எடை குறைத்து காணப்படுகிறார்.
இதனிடையே இன்று விடாமுயற்சி படத்தின் அப்டேட் வந்துள்ளது. பிரபல தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் அஜித் பட்டு வேஷ்டி சட்டையில் மிடுக்காக காட்சியளிக்கிறார்.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை திக்குமுக்காட வைத்த சர்ச்சைகள் ரீவைண்டு! - 2024 TAMIL CINEMA CONTROVERSIES
நடிகை ரம்யா விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மங்காத்தா, ஓகே கண்மணி, மாஸ்டர், ரசவாதி உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படப் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாவதை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.