தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'விடாமுயற்சி' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்... ரிலீஸ் எப்போது? - VIDAAMUYARCHI UPDATE

Vidaamuyarchi update: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'விடாமுயற்சி' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

விடாமுயற்சி டப்பிங் பணிகள் தொடக்கம்
விடாமுயற்சி டப்பிங் பணிகள் தொடக்கம் (Credits - @LycaProductions X Account)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 29, 2024, 3:01 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

கடைசியாக அஜர்பைஜானில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ரொம்ப நாட்களாக படம் குறித்து எந்தவித தகவலும் வராததால் அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். அதன் பிறகு இப்படத்தில் இருந்து மற்ற நடிகர்களின் அறிமுக புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதற்கிடையில் அஜித் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு மற்றும் கார் பந்தயத்திற்கு அவர் தயாராகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியானது. குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டாலும், விடாமுயற்சி படமும் அடுத்தாண்டு பொங்கலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் 20 நாட்கள், குடும்பத்துடன் 10 நாட்கள்... மும்பைக்கு ஷிஃப்ட் ஆக சூர்யா கூறிய காரணம் என்ன?

இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. நடிகர் ஆரவ் தனது டப்பிங்கை தொடங்கிய புகைப்படங்கள் வெளியானது. இந்தாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் 'விடாமுயற்சி' திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வருமா அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details