தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படம் வெளியான 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்யக்கூடாது.. கேரள நீதிமன்றத்தில் பரிந்துரை! - Kerala HC Amicus Curiae

Movie review rules: கேரள உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நபர், (amicus curiae) ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என பரிந்துரைத்துள்ளார்.

ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டாம்
ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டாம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 13, 2024, 10:27 PM IST

கொச்சி (கேரளா): கேரள உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்டவர் (amicus curiae), ஒரு திரைப்படம் வெளியாகி 48 மணி நேரத்திற்குள் படத்தை விமர்சனம் செய்யக்கூடாது என பரிந்துரைத்துள்ளார். அவ்வாறு விமர்சனம் செய்யப்படுவதால், சமூக வலைத்தளத்தில் படத்திற்கு வரவேற்பு குறைந்து வசூல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் மூலம் தன் சொந்த விருப்பத்தின் பேரில் ஒரு படத்திற்கு தவறான விமர்சனம் வழங்கப்படுவது குறையும்.

மேலும், உயர் நீதிமன்ற ஆலோசகர், இந்த விவகாரத்தைக் கண்காணிக்க பிரத்யேக இணையதளம் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திரைப்படத்தை விமர்சனம் செய்பவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்தை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த அறிக்கை, திரைப்படங்களை விமர்சனம் செய்வதில் உள்ள நெறிமுறைகளை பேணிக் காப்பதை வலியுறுத்துகிறது. இதனையடுத்து, இந்த நிலைப்பாட்டை கேரள உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஒரு சில விமர்சகர்கள், லாப நோக்கத்திற்காக புதிய திரைப்படங்களுக்கு வேண்டுமென்றே தவறான விமர்சனம் அளித்து வருகின்றனர் என புகார் எழுந்து வருகிறது.

இந்நிலையில், 'ராகெல் மாகென் கோரா' என்ற படத்தின் இயக்குநர், தனது திரைப்படம் தவறாக விமர்சிக்கப்படுவதாக கொச்சி மாநகர காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 25, 2023இல் புகார் அளித்தார். இந்த புகாரில் கேரளா உயர் நீதிமன்றம் வெளியிட்ட நெறிமுறைப்படி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதையும் படிங்க:பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details