சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படம் வா வாத்தியார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி, நடிகர்கள் சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக, நடிகர் கார்த்தி நடிக்கும் மெய்யழகன் படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் வெளியானது. அதனைத் தொடர்ந்து, கார்த்தியின் பிறந்தநாளான இன்று ’வா வாத்தியார்' படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. போலீஸ் உடையில் நடிகர் கார்த்தி நிற்க, அவருக்கு பின்னால் எம்ஜிஆர் வேடமிட்ட நபர்கள் இருப்பது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.