தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜோதிகாவின் 'ஷைத்தான்'; ஒரே நாளில் இவ்வளவு வசூலா?.. முழு விவரம் இதோ! - shaitaan box office collection

Shaitaan box office collection: ஜோதிகா, மாதவன் நடிப்பில் திகில் படமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஷைத்தான்' திரைப்படம், ஒரே நாளில் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shaitaan box office collection
Shaitaan box office collection

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 3:51 PM IST

சென்னை: பாலிவுட் இயக்குநர் விகாஸ் பால் இயக்கத்தில் ஜோதிகா, மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஷைத்தான்' திரைப்படம், மகளிர் தினமான நேற்று திரையரங்குகளில் வெளியானது. சமீபத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது.

இந்நிலையில், த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ஷைத்தான், திரையரங்குகளில் வெளியான முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்ப்புகளைர்த் தாண்டி 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ‘சூப்பர் 30’, ‘கானாபத்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விகாஸ் பால் இயக்கியுள்ளார். ஜியோ ஸ்டுடியோஸ், அஜய் தேவ்கனின் எஃப் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அமித் தர்தவேரி இசையமைத்துள்ளார்.

இப்படம் 'வாஷ்' என்ற குஜராத்தி படத்தின் இந்தி ரீமேக் என்று கூறப்படுகிறது. மேலும், தமிழில் இப்படம் ரீமேக் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பேர் சொல்லும் நடிகையான ஜோதிகா, சமீப காலமாக மற்ற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர், மலையாளத்தில் வெளியான 'காதல் தி கோர்' திரைப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஜோதிகாவிற்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களுக்குப் பின்னர், ஜோதிகாவுடன் நடிகர் மாதவன் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க:நலன் குமாரசாமி - கார்த்தி கூட்டணியில் உருவாகும் ‘கார்த்தி 26’ பூஜை வீடியோ வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details