தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மகன் கேட்ட கேள்வி.. 'மக்காமிஷி' குறித்து பேசிய ஜெயம் ரவி! - Jayam ravi about makkamishi song

'பிரதர்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், ’மக்காமிஷி’ பாடலுக்கு தான் நடனமாடியது குறித்து நடிகர் ஜெயம் ரவி பேசியுள்ளார்.

ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ் புகைப்படம்
ஜெயம் ரவி, ஹாரிஸ் ஜெயராஜ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 21, 2024, 5:43 PM IST

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள 'பிரதர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஜெயம்ரவி, பிரியங்கா, இயக்குநர் எம்.ராஜேஷ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, "ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும் என்றார்.

மேலும் மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான். ’பிரதர்’ என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன். அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான உறவைப் பற்றியது தான் பிரதர் திரைப்படத்தின் மையக்கதை.

இந்த படத்தில் எனது அக்காவாக பூமிகா நடித்துள்ளார். 'மக்காமிஷி' பாடலில் முதலில் எனக்கு சரியாக நடனம் ஆட வரவில்லை அதனை பார்த்த எனது மகன், அப்பா உங்களுக்கு வயசு ஆகிவிட்டதா என்றான். என்னால் அவனது கேள்வியை தாங்க முடியவில்லை. மீண்டும் அந்த பாடலுக்கு பயிற்சி எடுத்து நடனம் ஆடிக் காண்பித்தேன்” என்றார்.

இதையும் படிங்க: "வாழு வாழ விடு" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி.. சென்னையில் கூறியது என்ன? - Actor Jayam ravi about divorce

இதனைத்தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், "பலமுறை கேட்டு ரசித்து உருவாக்கிய பாடல் தான் 'மக்காமிஷி'. பிரதர் அருமையான குடும்ப திரைப்படம். ரசிகர்கள் பாடல்களை கொண்டாடுவதற்காக தான் திரைப்படத்திற்கே வருகிறார்கள். நல்ல படங்கள் உடனடியாக மக்களை போய் சேர்வதில்லை" என்றார். இதனையடுத்து மக்காமிஷி பாடல் உருவானது குறித்து ஹாரிஸ் ஜெயராஜ் மேடையிலேயே விளக்கினார். மேலும் மக்காமிஷி பாடலுக்கு ஜெயம் ரவி உடன் இணைந்து மேடையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் நடனம் ஆடினார்.

ABOUT THE AUTHOR

...view details