தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

4 நாளில் இந்தியன் 2 வசூல் இவ்வளவா? நெகடிவ் விமர்சனங்களை தூக்கி சாப்பிட்ட இந்தியன் தாத்தா? - Indian 2 Box Office Collection

தொடர் எதிர்மறை விமர்சனங்களால் வீழ்ந்த இந்தியன் இரண்டாம் பாகம் நேற்று ஒருநாள் மட்டும் வெறும் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

Etv Bharat
Indian 2 vs Sarfira Box Office Day 4 (Film Posters/ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 11:40 AM IST

ஐதரபாத்:ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அனிருத் இசையமைத்து உள்ளார். கடந்த 12ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று இப்படம் 30 கோடியே 75 லட்ச ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து வார இறுதி நாட்களான சனிக்கிழமை 20 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 18 கோடியே 50 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளது. இதன்படி வெளியான முதல் வார இறுதியில் உலகம் முழுவதும் மொத்தம் இந்தியன் இரண்டாம் பாகம் 72 கோடியே 25 லட்ச ரூபாய் மட்டுமே வசூலித்தது.

அதேநேரம் தமிழ்நாட்டில் மட்டும் இந்தியன் இரண்டாம் பாகம் 36 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது கமல்ஹாசனின் முந்தைய படமான விக்ரமின் வசூலை காட்டிலும் அதிலிருந்து கிட்டத்தட்ட பாதி என்ற அளவாகவே பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 19 கோடியே 75 லட்ச ரூபாயும், கர்நாடகாவில் 7 கோடியே 25 லட்ச ரூபாயும், கேரளாவில் 4 கோடியே 25 லட்ச ரூபாயும் படம் வசூலித்ததாக தகவல் கூறப்படுகிறது.

மேலும் இந்தியில் இந்தியன் இரண்டாம் பாகம் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. பொதுவாக வெளியான நாட்களை விட வார இறுதி நாட்களில் வசூல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம். ஆனால் தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்கள் எதிரொலியால் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் ஏறத்தாழ 72 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருப்பதும் படக்குழுவை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூலை.15) திங்கட்கிழமை இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 3 கோடியே 15 லட்ச ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான நிலையில் அந்த படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. சர்ஃபிரா என்ற தலைப்பில் வெளியான அந்த திரைப்படம் நான்கு நாட்களில் வெறும் 13 கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.

இதையும் படிங்க:போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் கைது! என்ன நடந்தது? - Rakul Preet Singh Brother arrest

ABOUT THE AUTHOR

...view details