தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கம்பீர தோற்றத்தில் நயன்தாரா: 'ராக்காயி' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு! - RAKKAYIE TITLE TEASER

Rakkayie title teaser: இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ராக்காயி படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்துள்ள ராக்காயி போஸ்டர்
நயன்தாரா நடித்துள்ள ராக்காயி போஸ்டர் (Credits - nayanthara Instagram Account, @DrumsticksProd X account)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 18, 2024, 10:53 AM IST

சென்னை: Drumsticks Productions தயாரிப்பில், நடிகை நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், அதிரடி ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தை Drumsticks Productions மற்றும் Movie Verse Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

நயன்தாரா அதிரடி ஆக்சன் அவதாரத்தில், இப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான கதைக்களத்தில், பரபரப்பான திரைக்கதையுடன், ப்ரீயட் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சி 'நயன்தாரா' ஆவணப்படத்தில் இடம்பெறுமா? நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளக்கம்.. என்ன செய்யப் போகிறார் தனுஷ்?

இதனிடையே வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ’Nayanthara Beyond the fairytale' நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாரா நடித்துள்ள நானும் ரௌடி தான் பட காட்சிகள் பயன்படுத்தியதற்கு அப்பட தயாரிப்பாளர் தனுஷ் காப்புரிமை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குறித்தும், தனுஷ் குறித்தும் கடந்த சனியன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details