தமிழ்நாடு

tamil nadu

நவ.1 முதல் அனைத்து விதமான படப்பிடிப்பு பணிகளும் நிறுத்தம் - தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு! - shooting work stopped from Nov 1

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 6:18 PM IST

Film Production Council: திரைத் துறையை மறுசீரமைப்பு செய்யும் விதமாக, வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு சம்மந்தமான அனைத்து வேலைகளும் நிறுத்தப்படுவதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

கேமரா
கேமரா (Credits - ravi varman insta page)

சென்னை: தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள்: ”முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய தீர்மானமாக, நடிகர்- நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம், மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால், அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால், வருகின்ற 01.11.2024 முதல் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேலைகளையும் நிறுத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது” என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள திடீர் கட்டுப்பாடு; விஷாலை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படங்களுக்கும் சிக்கல்? - dhanush new movie restrictions

ABOUT THE AUTHOR

...view details