தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"அமரன் படத்தின் விளம்பரத்துக்கு கமல் பெயரை பயன்படுத்த மாட்டேன்" - இயக்குனர் ராஜ்குமார் திட்டவட்டம்! - AMARAN

ஒவ்வொரு ராணுவ அதிகாரிகள் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது. அதில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை படமாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததுள்ளது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

அமரன் பட போஸ்டர் மற்றும் இயக்குநர் ராஜ்குமார்
அமரன் பட போஸ்டர் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2024, 9:13 PM IST

சென்னை:ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் அமரன். கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை மறுநாள்(அக்.31) திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சென்னை பிரசாத் லேபில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)

அப்போது அவர் கூறியதாவது, "2014ல் மேஜர் முகுந்த் வரதராஜன் தனது மகளுக்கு அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலை பாடினார். ஒரு ராணுவ வீரர் தனது பெண்ணிற்கு ஒரு பாடலை பாடிக்கொடுத்துட்டு போய் இருக்கிறார். அவர் இறந்த பிறகு அதுகுறித்து செய்திகள் வெளியானது.‌ அவர் குறித்த வீடியோ இது மட்டும்தான் இருந்தது. இந்த வீடியோ அவரது மகளுக்கு சிறந்த நினைவுகளாக இருக்கும். ஒவ்வொரு ராணுவ அதிகாரிகள் வாழ்விலும் ஒரு கதை இருக்கிறது. அவர் கதையை படமாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கமல்ஹாசன் கதையை கேட்டு அவராக முன்வந்து இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் முதல்முறையாக உலகம் முழுவதும் 800 திரைகளில் வெளியாக உள்ளது. படத்தை பார்த்த வெளிநாட்டு விநியோகஸ்தர் பெருமிதத்துடன் இருந்தார்.

படம் பார்க்கும் போது சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு சரியான தேர்வு தான் என்று தோன்றியது. ராணுவம் பற்றி படம் எடுத்தால் இந்திய பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். நாங்கள் அனுமதி பெற்று அவர்களிடம் படத்தைப் போட்டுக் காட்டினோம். இப்படத்தை பார்த்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்ததுடன் இப்படத்தை நாடு முழுவதும் உள்ள ராணுவத்தினர் மத்தியில் கொண்டு செல்ல விரும்பினர்.

900 பேருக்கு படம் போட்டுக் காட்டப்பட்டது. அனைவரும் படத்தை பார்த்து நெகிழ்ந்து போயினர். சில காட்சிகளை எங்களுடன் தொடர்புப் படுத்திக் கொள்ள முடிந்ததாக கூறினர். எனது பிறந்தநாளான அக்டோபர் 22ம்‌தேதி மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோர் படம் பார்த்தனர். நிறைய பகிர்ந்து கொண்டனர்.

ஜூலையிலேயே படம் பார்த்த கமல்ஹாசன் இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட அப்போதே தெரிவித்துவிட்டார். அவருக்கும் ரொம்ப படம் பிடித்திருந்தது. இப்படம் ஒரு வீரரின் பெருமையைப் பேசும் படம். கமல்ஹாசன் படம் பார்த்து என்ன சொன்னார் என்பதைப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு சொல்லலாம் என்று நினைக்கிறேன். படத்தின் விளம்பரத்துக்கு கமல் பெயரைப் பயன்படுத்த நான் விரும்பவில்லை.

அமரன் இப்படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இதன் உரிமையை அனுமதி பெற்று வாங்கினோம். இது வாழ்க்கை வரலாற்றுப் படம் உண்மையை திசை திருப்பாமல் மிகைப்படுத்தல் இல்லாமல் எடுத்துள்ளோம். சிவகார்த்திகேயன் தாடி வைத்துள்ளதற்கான விளக்கம் படத்தின் முதல் காட்சியிலேயே இருக்கும். சிவகார்த்திகேயன் இப்படத்திற்காக முதலில் மனதளவில் தயாரானார். உடலளவில் தயாராகவும் நடிப்புக்கும் மும்பையில் பயிற்சி எடுத்தார். அதேபோல் ராணுவ வீரர்களிடம் பயிற்சி எடுத்தார்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details