தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

விஜயும் நானும் அரை மணிநேரம் பேசினோம் - இயக்குநர் எழில் சுவாரஸ்ய பதிவு! - இயக்குநர் எழில்

Desingu Raja 2: இயக்குநர் எழில் 'தேசிங்கு ராஜா 2' படம் குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், படம் சம்மருக்கு ரிலீஸ் ஆகும் எனவும், சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்தபோது அரை மணி நேரம் என்னுடன் நன்றாக பேசினார் எனக் கூறியுள்ளார்.

Desingu Raja 2
தேசிங்கு ராஜா 2

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:38 AM IST

சென்னை:தேசிங்கு ராஜா 2 படத்தின் இயக்குநர் எழில், தனது அடுத்த படம் குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"காமெடி என்று வந்துவிட்டால் விமல் அந்த அலைவரிசைக்குப் பிரமாதமாக செட் ஆகிவிடுவார். ரவி மரியா, ரோபோ சங்கர், கிங்ஸ்லி, மதுரை முத்து, மதுமிதா என காமெடி கூட்டணி களை கட்டியுள்ளது.

குறிப்பாக, முதல் பாகத்தில் பண்ணையாராக நடித்த ரவிமரியா, இதில் அரசியல்வாதியாக அட்ராசிட்டி செய்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு எப்படி எனக்கு அழகான பாடல்களை வித்யாசாகர் கொடுத்தாரோ, இதிலும் அதேபோல கொடுத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாகப் பேசப்படும். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் செலவைப் பார்க்காமல் தயாரித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களில் 15 படங்கள் இயக்கி உள்ளேன். இதை பெரிய சாதனை என்று சொல்ல முடியாது. ஆனாலும் நண்பர்கள் விரும்பினார்கள் என்பதற்காக, 25ஆம் ஆண்டு விழா நடத்தினோம். ஆரம்பத்தில் காதல் படங்களை எடுத்துக் கொண்டிருந்த நான், அப்படியே காமெடிக்கு திசை திரும்பியது ஒன்றும் பெரிய குறை இல்லை.

இங்கே சிந்திய வியர்வைக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது. நிறைய பாடமும் கற்றிருக்கிறேன். பிழைகளைத் திருத்திக் கொண்டு அடுத்தடுத்து சென்று கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நடிகர் விஜயைச் சந்தித்தபோது பிஸியான சூழலிலும், என்னிடம் அரை மணி நேரத்திற்கு மேல் பேசினார். சினிமாவில் புகழ் வெளிச்சம் கிடைக்கும்போது, நம் குணத்தை அது மாற்றாமல் இருக்க வேண்டும். வெற்றி கூட சுலபம்தான், ஆனால் அதை தக்க வைக்க பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.

இத்தனை வருடமாக சினிமாவில் இருந்தாலும், என்னுடைய கனவும், நேற்று வந்து சினிமா பண்ணுறவங்க கனவும் ஒன்றுதான். கற்பனைக்கும், கனவுக்கும் வயதில்லை. படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடும்பங்கள் ஜாலியாக கொண்டாடும் சம்மர் வெளியீட்டாக படம் தயாராகி வருகிறது" என்று அதில் கூறி உள்ளார்.

இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக பூஜிதா பொனாடா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார். மேலும் ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொல்லு சபா சாமிநாதன், மாதுரி முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க:உறியடி விஜய் குமாரின் 'எலக்சன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details