திருவள்ளூர்: தமிழ் சினிமாவில், மூத்த கதாசிரியராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் இயக்குநர் துரை வயது மூப்பு காரணமாக இன்று(ஏப்.22) உயிரிழந்தார். இவரின் உடல் திருவள்ளூர் அடுத்த வேப்பம் பட்டு பகுதியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் திரைத்துறையினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நாளை(ஏப்.23) காலை சுமார் 11 மணியளவில் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற 'பசி' படத்தின் இயக்குநர் துரை காலமானார்! - Director Durai Passed Away - DIRECTOR DURAI PASSED AWAY
Director Durai Passed Away: இயக்குநர் துரை வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது உடல் நாளை(ஏப்.23) அடக்கம் செய்யப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
![தேசிய விருது பெற்ற 'பசி' படத்தின் இயக்குநர் துரை காலமானார்! - Director Durai Passed Away Director Durai Passed Away](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/22-04-2024/1200-675-21288963-thumbnail-16x9-pas.jpg)
Published : Apr 22, 2024, 9:18 PM IST
முன்னதாக, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில், இவர் இயக்கிய பசி என்ற திரைப்படம் தமிழக அரசின் விருதையும், தேசிய விருதையும் பெற்றது. அதே போல், இவர் இயக்கிய சதுரங்கம், அவள் ஒரு காவியம், ஒரு வீடு ஒரு உலகம், எங்கள் வாத்தியார் போன்ற திரைப்படங்கள் மாநில விருதையும் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதையும் படிங்க:ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்: உணவுப் பாதுகாப்புத்துறையின் எச்சரிக்கை? - How To Identify The Good Mango