ஹைதராபாத்: நடிகை ஜான்வி கபூர் முன்னாள் மகாராஷ்டிரா முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும், தொழில் முனைவோருமான ஷிகர் பஹாரியாவை காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், இருவரும் பல்வேறு கோயில்களுக்கும், ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுக்கும் ஒன்றாக வந்தனர்.
சமீபத்தில் ஜான்வி கபூர் தனது தந்தை தயாரிப்பில் வெளியாகியுள்ள மைதான் படத்தின் முன்னோட்ட காட்சிக்கு வந்துள்ளார். அப்போது 'shiku' என்ற பெயரில் நகை அணிந்து வந்துள்ளார். அந்த நகை ஷிகர் பஹாரியா பரிசாக அளித்தது என கூறப்படுகிறது.
மேலும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் தனக்கு அவசர நிலையில் எதாவது உதவி தேவைப்படும் பட்சத்தில் shikuவை அழைப்பேன் எனக் கூறியுள்ளார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஜான்வியை ஷிகர் பஹாரியாவுடன் ஒப்பிட்டு கரண் கிண்டல் செய்தார். அப்போது ஜான்வி, “நாதன் பரிந்தே பாடலை ஷிகர் அடிக்கடி என்னுடன் பாடுவார்” என கூறியுள்ளார்.
மேலும் எனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் நான் எனது தந்தை, குஷு, மற்றும் ஷிஹாரியாவை அழைப்பேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கான், ப்ரியாமணி, கஜ்ரஜ் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள மைதான் திரைப்படம் இன்று (ஏப்ரல் 11) வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:விஜயின் G.O.A.T ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கவனிக்க வைக்கும் போஸ்டர்! - GOAT Release Date