தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சூர்யா VS தனுஷ்... ஒரே நாளில் வெளியாகும் படங்களால் சூடுபிடிக்கும் கோலிவுட்! - IDLI KADAI RELEASE DATE

Dhanush vs Suriya: தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படமும், சூர்யா 44 திரைப்படமும் வரும் ஏப்ரல் 10ஆம் தெதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது

இட்லி கடை, சூர்யா 44 திரைப்பட போஸ்டர்
இட்லி கடை, சூர்யா 44 திரைப்பட போஸ்டர் (Credits - @DawnPicturesOff, 2D Entertainment 'X' Page)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 8, 2024, 12:04 PM IST

சென்னை: தனுஷ் இயக்கி வரும் ’இட்லி கடை’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டான் பிக்சர்ஸ் (Dawn pictures) சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் 'இட்லி கடை'. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இத்திரைப்படத்தில் தனுஷுடன் அருண் விஜய், அசோக் செல்வன், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்ட பின்னணியில் நடைபெறும் கதையாக இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இயக்கி, நடித்து சமீபத்தில் வெளியான இவரது 50வது படமான ’ராயன்’ பாக்ஸ் ஆபிலிஸ் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து தனது 52வது படமாக இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதனிடையே ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என தெரிகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலிருந்து வெளியான ’Golden sparrow’ பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமின்றி தெலுங்கில் 'குபேரா' என்ற படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் ஒரே சமயத்தில் நடிகராகவும், இயக்குநராகவும் கலக்கி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சினிமாவிற்கு குட்பை சொல்லும் விஜய், வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா... சினிமா வல்லுநர்கள் கருத்து என்ன?

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படமும் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக சூர்யா, தனுஷ் படங்கள் பலமுறை ஒரே நாளில் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு வேல், பொல்லாதவன் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது, அதனைத்தொடர்ந்து பலமுறை தனுஷ், சூர்யா படங்கள் ஒரே மாதத்தில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details