சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமின்றி பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர். இவரது நடிப்பில், இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர்.
இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கினார். இதில், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை சத்யஜோதி ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.
இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்தது. இந்நிலையில், லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விருது விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் கேப்டன் மில்லர் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃப்லிம்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தற்போது நடிகர் தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படம் ஜூலை 26ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படிங்க:தங்கலான் முதல் சர்ஃபிரா வரை.. அடுத்தடுத்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! - GV Prakash about Thangalaan songs